Tuesday, June 05, 2007

காதலாகி கசிந்துருகி


மயங்கி கிறங்கி மையலுற்று
காதலாகி கசிந்துருகி
காதல் பிறப்பெய்து
அதனால் இறப்பெய்து
இறைவனடி சேர்ந்தேன்!!!
இறைவன் கேட்டான், "என்ன செய்தாய்"?"
காதலுற்றேன்", விரக்தியாய் நான்.
"எது வேண்டும்? சொர்க்கமா? நரகமா?", கேட்டது கடவுள்.
புதிய இடம் வேண்டாம்
நரகமே தந்து விடு
நான் பழகிய இடம்!!!
நகைத்துச் சிரித்தார் கடவுள்...

2 Comments:

Blogger vhalar said...

புதிய இடம் வேண்டாம்
நரகமே தந்து விடு
நான் பழகிய இடம்!!!

alegane varigal....

June 05, 2007 12:54 PM  
Blogger Babu said...

பழகிய இடம்...என்பதை பார்த்ததும் எனக்கொரு பாடல்தான் நினைவு வந்தது.

காதல் நரகமே..உலகமே ஒ..ஒரு மூடன் கதை சொன்னால்...

நன்றாக உணர்ந்து எழுதப்பட்ட கவிதை. பாராட்டுக்கள் !!

June 05, 2007 3:02 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home