காதல் பக்கங்கள்

வெயிலும் நிலவும் முட்டிக் கொண்ட தருணங்களில்
உன் கார்மேகக் கரு விழிகளால்
என் புகைப்படம் நோக்கி நீ பிறப்பித்த
ஒரு மூன்றாம் பிறைப் புன்னகையில்
பிறந்தே விட்டது நமக்கான காதல் பக்கங்கள்
ஒரு பெண் பார்க்கும் நாளில்
உன் ஒற்றைப் புருவம் நெரித்து
கால் கோலம் பொட்டு
நீ வீசிய காதல் அம்புகளில்
என் இதயமெங்கும் சந்தோஷ சாரல்கள்...
எனக்கும் உனக்கும் இடையில்
இடைவெளி குறைந்த தருணங்களில்
தீயினை தீண்டாமலே
எனக்குள் நெருப்பு பிரவாகம்
எனக்கென எத்தனை உறவுகள் இருந்தாலும்
எனக்கென நீயொரு உயிராய்
உனக்கென நானொரு உருவாய்
வாழப்போகும் நிமிடங்களை நினைத்த போது
பிறந்தே விட்டது நமக்கான காதல் பக்கங்கள்...


2 Comments:
(உறுதிமொழி: அனைத்தும் கற்பனையே!!!)//
இந்த கவிதை மட்டும் உண்மை.
அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள் செந்தில்..!![:)]
woww!! seN ungal kavithayai patri sollavaa vendum...i can imagine...
its sooo beautiful.....
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home