Friday, May 18, 2007

நீ தலையாட்டி இருந்தால்? (Nee thalaiyaati irunthaaal)


சென்னை பட்டணத்தில் பாண்டி பஜாரில்
ஒரு ஓட்டை மோட்டார் சைக்கிளில்
புருசனோட நீ போவதை பார்த்தேன்!!!
உனக்கு நியாபகம் இருக்கா

சின்ன வயசு கவிதை கனவுகளை?
ஒடி பிடித்து விளையாடும் போது
ஒருவரை ஒருவர் முறைத்து கொள்வோமே!!!
நொண்டி ஆட்டத்தில் என்னை ஜெயித்தால்

துள்ளி குதித்து ஓடுவாயே!!!
கூட்டாஞ்சோறு ஆக்கும்போது
கொஞ்சம் கூட தரமாட்டேன் என்பாயே!!!
பள்ளி கூடம் போகும் வழியில்
என் சைக்கிளில் ஏறிக்கொள்ள சொன்னாலும்
ஏற மாட்டென் என்று அடம் பிடித்து
எட்டிச் சென்று விடுவாயே!!!
நான் என் காதலை உன்னிடம் சொன்ன போது

என்னை பார்த்து அப்படி ஒரு முறைப்பு
அன்று நீ தலையாட்டி இருந்தால்?


chennai pattanathil pondy bazaaril
oru ottai motor cycilil
purusanoda nee povathai paarthen!!!
unakku nyapagam irukka

chinna vayasu kavithai kanavugalai?
odi pidithu vilaiyadum pothu
oruvarai oruvar muraithu kolvome!!!
nondi aatathil ennai jeyithaal

thulli kuthithu oduvaye!!!
kootanchoru aakumpothu
konjam kooda tharamaten enbaye!!!
palli koodam pogum valiyil

en cycilil erikolla sonnalum
era maaten endru adam pidithu
etti sendru viduvaye!!!
naan en kaathalai unnidam sonna pothu

ennai paarthu appadi oru muraippu
andru nee thalaiyaati irunthaal?

Thursday, May 10, 2007

மரண படுக்கை (Marana padukkai)



விடிந்த பின்னும் யோசிக்கிறேன்
முடியாத என் இரவுகளை!!!
எத்தனை முறை சொல்லியிருப்பாய்
என்னை மறந்து விடாதே என்று!!!
கலைந்து போன மேகங்களாய்
என் காதல் கனவுகள்!!!
சிறகடிக்க ஆசைப்பட்டு
சிறகொடிந்து போனது!!!
மறக்க முடியாத நினைவுகளோடு
மரண படுக்கைக்கு செல்கிறேன் !!!


Vidintha pinnum yosikiren
mudiyatha en iravugalai!!!
ethanai murai solliyiruppai
ennai maranthu vidathe endru!!!
kalainthu pona megangalaai
en kaathal kanavugal!!!
siragadikka aasaipattu
siragodinthu ponathu!!!
marakka mudiyatha ninaivugalodu
marana padukkaiku selgiren !!!