Tuesday, December 16, 2008

ஒரு முறை.. ஒரே முறை...



நாளங்கள் எங்கும் நாணங்களும்...
இதழ் ஒரங்கள் எங்கும் ஈரங்களும்...
பனிப் பாதங்கள் தன்னில் கோலங்களும்...
சிறு அருவம் என்றாலும் விழி பாவங்களும்...
இப்படி முதல் முறையாக
உன்னை பார்த்த போதே எனக்குள்
சந்தோஷ சாரல்கள் சாமரம் வீசியதேனென்று தெரியவில்லை இன்னும்!!!
ஒரு நாள், உன்னை நானும் என்னை நீயும்
முதல் முறையாக பார்த்து கொண்ட போது
முட்டிக்கொண்ட நம் பார்வை அம்புகளில்
தெறித்து விழுந்ததென்னவோ நம் காதல் துளிகள் தான்...
உன் தாவணிக்குள் ஒளித்து வைத்த
இதயத்தின் சிணுங்கல்கள் கூட
என் காது வரை கவி பாடி செல்கிறதடி!!!
நேற்றைய இரவுகளில் கைபேசியின் உறக்கம் தொலைத்து
கனவுகளுடனே நினைவில்லாமல் பேசியதையும்,
என் நினைவுகளுடன் கனவுகளாய் கைது செய்திருக்கிறேன்...
இன்னும் காத்திருக்கிறேன்....
ஒரு முறை.. ஒரே முறை.. தோன்ற போகும்
அந்த ஒரு நொடி காதல் சந்தத்திற்காக..