Tuesday, November 14, 2006

நடை பிணம் (Nadai pinam)


கத்தி இல்லை ரத்தம் இல்லை
மாயம் இல்லை காயம் இல்லை
உன் வார்த்தை கணைகள்
கொன்று விட்டன என்னை!!!
பிறகெப்படி நடக்கிறேன் நான்?
ஓ, என்னை தான் சொன்னார்களோ,
நடை பிணம் என்று????


Kaththi illai Raththam Illai
Maayam Illai Kaayam Illai
Un varthai Kanaigal
Kondru vittana ennai!!!
Pirageppadi nadakkiren naan?
Oh, Ennai thaan sonnargalo,
Nadai pinam endru????

Thursday, November 09, 2006

இனி வேண்டாம் அவள்.... (ini vendam aval)


உறங்காத இரவுகள் உண்டு
உன்னோடு இருந்த பொழுது
உணர்வற்று இருந்த பொழுதுகள் உண்டு
உன்னோடு இருந்த பொழுது
கலையாத கனவுகள் உன்டு
உன்னோடு இருந்த பொழுது
அத்தனையும் மறைந்து போனது
அவள் போனவுடன்
இது கூட ஒரு சுகம் தான்
இனி வேண்டாம் அவள்....



Urangatha Iravugal undu
unnodu iruntha poluthu
Unarvatru iruntha poluthugal undu
unnodu iruntha poluthu
Kalaiyatha kanavugal undu
unnodu iruntha poluthu
Aththanaiyum marainthu ponathu
Aval ponaudan
Ithu kooda oru sugam thaan
ini vendam aval....

ஒற்றை வார்த்தை (Otrai varthai)


ஓற்றை வார்த்தை கேட்க
ஒரு நாள் காத்திருந்தேன்.
சினுங்கிய செல்பேசியை எடுத்து
காதருகில் வைத்தேன்.
உடனே சொன்னாள் ஒரு வார்த்தை
"நாளை பேசலாம். சரியா?".
காத்திருத்தலும் ஒரு சுகம் தானே?
நாளையும் இதே ஒற்றை வார்த்தை என்றால்?


Ottrai varthai ketka
oru naal kaathirunthen.
sinungiya selpesiyai eduthu
kaatharukil vaithen
udane sonnal oru varthai
"Naalai pesalaam. sariya?".
kaathiruthalum oru sungam thaane?
naalaiyum ithe ottrai varthai enraal?

குருதி கனவுகள் (Kuruthi kanavugal)


ஆழியும் வந்தது
அடை மழையும் பொழிந்தது
நீரும் பெருகியது
நீயும் விலகினாய்
நானோ நெருங்கினேன்
நயமாய் ஒதுங்கினாய்
கண்டுகொண்டேனடி உன்னை
கவலை வேண்டாம்
காதலுக்கு மரியாதை
கண்டிப்பாக கொடுத்திடுவேன்
கலங்க வேண்டாம்
காதலன் கைப்பற்றி
கணவணாய் உருமாற்றி
தமிழ் மண் மீது
கால் பதிக்கும் நேரமதை
வெற்றி விழாவாய் கொண்டாட
உனக்கு முன்னே ஒடி வந்து
குருதி கம்பளம் விரித்து
குற்றுயிறாய் கிடக்கிறேன்
என் மேது ஏறி சென்றேனும்
காதல் அரியணை ஏறிடு
வெற்றி தானே முக்கியம்!!!


Aazhiyum vanthathuadai
mazhaiyum pozhinthathu
neerum perugiyathu
neeyum vizhaginaai
naano nerunginen
nayamaai othunginaai
kandukondenadi unnai
kavalai vendam
kadhaluku mariyathai
kandipaga koduthiduven
kalanga vendam
kaathalan kaipatri
kanavanaai urumaatri
tamizh man meethu
kaal pathikum neramathai
vetri vizhavaai kondada
unakku munne odi vanthu
kuruthi kambalam virithu
kutruyiraai kidakiren
En meethu eri chendrenum
kaathal ariyanai eridu
vetri thaane mukkiyam !!!

காலமெல்லாம் காத்திரு (Kaalamellam kaathiru)


என்னை விட நேசித்த ஜீவனுமில்லை
என்னை விட யோசித்த ஜீவனுமில்லை
காலம் மாறியது. காட்சியும் மாறியது.
அகநானூறு பாடிய மனதில்
புறநானூறை புகட்டியவள் நீதானே?
யோசிக்க எல்லாம் நேரமில்லை.
உலகம் எனக்காக காத்திருக்கிறது.
அறிவிழந்து கிடந்த நேரங்களை
அழகாக்கி கொள்ள விரைகிறேன்.
வேதாளத்தை மீண்டும் எரிகிறேன்
வீழ்ந்த முருங்கை மரத்தில்.
காலமெல்லம் காத்திரு பெண்ணே
காலம் உனக்கு பதில் சொல்லும்..


Ennai vida nesitha jeevanumillai
Ennai vida Yositha jeevanumillai
Kaalam mariyathu. kaatchiyum mariyathu.
Aganaanooru paadiya manathil
Puranaanoorai pugatiyaval neethane?
Yosika ellam neramillai.
Ulagam enakaga kaathirukirathu.
Arivilanthu kidantha nerangalai
Alagaaki kolla viraigiran.
Vedhalathai meedum erigiren
veezhntha murungai marathil.
Kaalamellam kaathiru penne
Kaalam unakku pathil sollum..

நான் சாக வேண்டாம் (Naan saaga vendam)

உணவு கூட வேண்டாம்
உணர்வு மட்டும் போதும்.
உறவு கூட வேண்டாம்
இரவு மட்டும் போதும்.
முகங்கள் கூட வேண்டாம்
நகங்கள் மட்டும் போதும்.
காதல் இல்லையென வேண்டாம்
என் சாதலுக்கு அது போதும்.


Unavu kooda vendam
Unarvu mattum pothum.
Uravu kooda vendam
Iravu mattum pothum.
mugangal kooda vendam
Nagangal mattum pothum.
Kaathal illaiyena vendam
En saathaluku athu pothum.